கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை செயலகத்தில் 50 சதவீதப் பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று முதல் தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து இன்று தலைமை செயலகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் 50 சதவீத பணியார்களே வந்திருந்தனர். மீதம் உள்ள ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர உத்தரவு பிறப்பித்தால் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என்றும், தாங்கள் பணி புரியும் மாவட்டத்தில் இருந்து பணியாற்றுகிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.







