நீலகிரி மாவட்டம், குன்னூரில் நாளை முதல் சிறு-குறு தேயிலை விவசாயிகள் தரமான
தேயிலையை வழங்கினால் மட்டுமே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்று
குன்னூரில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சர் அன்பரசன், இண்ட்கோ சர்வ்
விவசாயிகளிடம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர்
தேயிலை உற்பத்தியாளர் சிறு விவசாயிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக, குன்னூர் இண்ட் கோசர்வ் , இண்ட்கோ தேயிலை தொழிற்சாலையில் ஆய்வு செய்து மற்றும் நியாய விலை கடைகளுக்கு பேக்கிங் செய்து அனுப்பப்படும் இடத்தை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து சிறு-குறு தேயிலை விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.
அதில் கலைஞர் ஆட்சியில் 2 ரூபாய் மானியம் வழங்கினர். அதேபோல மானியம் வழங்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கோரிக்கையை ஏற்ற சிறு-குறு மற்றும்
நடுத்தர தொழில் அமைச்சர் அன்பரசன், முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என தெரிவித்தார்.
விவசாயிகளிடம் அமைச்சர் பேசுகையில், இண்ட்கோ சர்வ் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தரமான தேயிலை மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். நியாய விலை கடைகள் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இண்ட்கோ சர்வ் அதிகாரிகளுடன் இரண்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினார். விவசாயிகள் தரமான தேயிலை உற்பத்தி செய்தால் மட்டுமே உரிய விலை கிடைக்கும் என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-மணிகண்டன்