பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தை பேணி பராமரிப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் ரூ. 2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள தாகூர் அரங்கில் பேராசிரியர்கள் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கல்வி நிறுவனங்கள் எதிர்கால மறுமலர்ச்சியின் பாதையாக திகழ்கின்றன.
நாளந்தா பல்கலைக்கழகத்தின் பெருமையைக் காக்கும் வகையில், அதனை மேம்படுத்துவதற்காக ரூ. 2,700 கோடியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவை தரமான கல்வியின் மிகப்பெரிய மையமாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.
-ம.பவித்ரா








