டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24…

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 18.5 லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில், இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி : பாதயாத்திரை முதல் பதவி பறிப்பு வரை…. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குரூப் 4 பிரிவுக்கான திருத்தி அமைக்கப்பட்ட காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, 7,301 ஆக இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக உயர்ந்தது. இதனால், குரூப் 4 தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இத்தேர்வு முடிவுகளை http://tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.