முக்கியச் செய்திகள் தமிழகம்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; தமிழக அரசு அரசாணை!

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா காரணமாக 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் நடிகர்கள் விஜய், சிம்பு ஆகியோரும் முதல்வர் பழனிசாமியிடம் இதே கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரையரங்க உரிமையாளர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும் ரசிகர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காட்சி நேரத்தில் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களும் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருநங்கை கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது

G SaravanaKumar

கடைசி டி-20 போட்டி: தொடரை வென்றது இலங்கை அணி

Gayathri Venkatesan

ஞானவாபி மசூதி விவகாரம்; இந்துக்கள் புதிய மனு தாக்கல்

G SaravanaKumar

Leave a Reply