தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தலைமைச்செயலாளர், பொதுத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது என முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், வரும் 7-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது.
இந்நிலையில் வரும் 7-ம் தேதிக்குப் பின்னர் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? கொரோனா தொற்று குறைந்த பகுதிகளுக்குத் தளர்வுகள் அளிக்கலாமா? என்பது குறித்த முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.







