முக்கியச் செய்திகள் தமிழகம்

நியாயவிலைக் கடைகளில் ஆய்வு நடத்த உத்தரவு

நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்து மண்டல பொறுப்பாளர்கள் ஆய்வு செய்யுமாறு கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, வரவு மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது எண்ணெய், தேயிலை தூள் உள்ளிட்ட பொருட்கள் காலாவதியாகி உள்ளதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதியான பொருட்கள் கடைகளில் இருந்தால் அப்பகுதியில் உள்ள ஆய்வு அலுவலரே முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

‘ஒன்றிய அரசு’ என அழைப்பது ஏன்? மனோ தங்கராஜ்

Gayathri Venkatesan

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு

Halley karthi

எலக்ட்ரிகல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் சேதம்!

Vandhana