முக்கியச் செய்திகள் இந்தியா

உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு புதிய தளர்வுகள்

உள்நாட்டு விமானங்கள் 65 சதவிகித பயணிகளுடன் இயங்க மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விமான போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளை மத்திய போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்திருந்தன.

இதை பரிசீலித்த மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் 111 நாட்களுக்கு பின்னர் தொற்று பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு உள்நாட்டு விமானங்கள் 65 சதவிகித பயணிகளுடன் இயங்கலாம் என அறிவித்துள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் போக்குவரத்துத்துறை தெளிவுபடுத்தி பதிவிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஜூலை 31 வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும்வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 50 சதவிகித பயணிகளை மட்டுமே போக்குவரத்துத்துறை அனுமதித்திருந்தது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 553 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,03,281 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்த முடிவு

Jeba Arul Robinson

மத்திய அமைச்சராக பதவியேற்பது சந்தோஷமாக உள்ளது: எல்,முருகன்

Saravana Kumar

படப்பிடிப்பில் இயக்குநர் சேரன் காயம்: தலையில் எட்டு தையல்

Gayathri Venkatesan