ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி!

மதுரையில் 86 வயது மூதாட்டி ஒருவர் தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்சில் வந்து வாக்களித்துள்ளார். மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலையில் வசிக்கும் 86 வயதான ராஜமாணியம்மாள் என்ற மூதாட்டி, சமீப காலமாக உடல் நலக் குறைவு…

மதுரையில் 86 வயது மூதாட்டி ஒருவர் தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்சில் வந்து வாக்களித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலையில் வசிக்கும் 86 வயதான ராஜமாணியம்மாள் என்ற மூதாட்டி, சமீப காலமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது ஜனநாயக கடமையாற்ற வேண்டி தனது குடும்பத்தார் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த மூதாட்டி வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதேபோன்று சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் தொகுதியில் 95 வயதான மூதாட்டி வந்து வாக்களித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.