மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள மணி மண்டபத்தில் தியாகிகளின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் மற்றும் திமுக மாணவரணி நிர்வாகிகளுடன் இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மணிமண்டபத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் அங்கு மாவட்ட வாரியாக வைக்கப்பட்டிருந்த மொழிப் போராட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களை நடந்து சென்று பார்வையிட்டார். பிறகு மணிமண்டபத்திற்குள் வைக்கப்பட்டிருந்த நடராசன் , தாளமுத்து , கீழப்பழுவூர் சின்னச்சாமி உள்ளிட்டோரின் திருவுருவப் படங்களுக்கு அமைச்சர்களுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன் , மு.பெ. சாமிநாதன் , மா.சுப்பிரமணியன் ,கே.என்.நேரு, எ.வ.வேலு, ரகுபதி, தங்கம்தென்னரசு, சி.வி.கணேசன் மற்றும் திமுக மாணவரணி மாநிலச் செயலாளர். சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.








