கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முனைவர் வி.எஸ்.ராஜம், பேராசிரியர்கள் பொன்.கோதண்டராமன், சுந்தரமூர்த்தி, மருதநாயகம், மோகனராசு, மறைமலை இலக்குவனார், ராஜன், உல்ரிக் நிக்லாஸ், சிவமணி, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோருக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல; அது ஒரு பண்பாட்டின் அடையாளம் என தெரிவித்தார். சென்னை மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை, செம்மொழி சாலை என அழைக்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர், தமிழை ஆட்சி மொழியாகவும், வழக்காடும் மொழியாகவும் மாற்ற தமிழ்நாடு அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.







