30.6 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டிசம்பர் 14ல் அமைச்சராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

வரும் 14ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் வரும் 14ந்தேதி அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே ஒரு முறை தமது அமைச்சரவையை மாற்றியமைத்தார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த மாற்றத்தின்போது,  போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறைக்கும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் வரும் 14ந்தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்  மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading