அன்பில் மகேஸை நவ.4-ஆம் தேதி வரை போலீஸ் காவல்! – சென்னை உயர்நீதிமன்றம்

அன்பில் மகேஸை நவ.4-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த திமுக ஆட்சியின்போது, நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அன்பில் மகேஸ்க்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த அக் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை போலீசார் கைது செய்து சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அன்பில் மகேஸுக்கு நவம்பர் 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தனர். இதனைத்தொடர்ந்து அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே அன்பில் மகேஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற 2-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து இருந்தது.

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை இன்று மதியம் 1 மணி முதல் 4-ந்தேதி மாலை 5 மணி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் விசாரணைக்கு முன்னதாக அன்பில் மகேசுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவரை போலீசார் உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவல் துறை விசாரணையின்போது வழக்கறிஞர் உடன் இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், விசாரணை முடிந்து, 5-ந்தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.