ஊராட்சிகளை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சியாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன், உடுமலைப்பேட்டையை மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என்றும், மடத்துக்குளத்தை நகராட்சியாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக இருப்பதால், அவர்களின் பதவிக்காலங்கள் முடியும்போது, தேவை ஏற்படின் அவற்றை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.
உடுமலைப்பேட்டையை மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும், மடத்துக்குளத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடியும் போது, பெரிய நகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.







