தனது வாழ்வில் 29சி பேருந்தை மறக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்திலிருந்து மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ராதாகிருஷ்ணன் சாலையில் தனது வாகனத்தை நிறுத்தச்சொல்லி அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். வந்த பேருந்தில் ஏறுவார் என எதிர்பார்த்த நிலையில், 29சி பேருந்திற்காக காத்திருந்து ஏறி அதில் பயணித்து, பயணிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
முதலமைச்சர் தங்கள் பேருந்தில் பயணித்த உற்சாகத்தில் அவருடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டு, கோரிக்கைகளையும் முன்வைத்தனர். திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு சட்டமன்றத்தில் உரையாற்றினார் முதலமைச்சர்.
அப்போது தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்ட அவர், “என் வாழ்வில் 29சி பேருந்தை மறக்க முடியாது. 29C பேருந்தில் ஏறி தான் பள்ளிக்கு சென்று படித்தேன். பேருந்தில் பயணம் செய்த மக்களிடம் ஆட்சி திருப்தியாக இருக்கிறதா? என்று கேட்டறிந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement: