முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமாகா முக்கிய பங்கு வகிக்கும்’ – யுவராஜா

ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக -தமாகா கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என்று ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார். இந்த முடிவை தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜாவும் ஏற்றுக்கொண்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெராவை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழந்தாலும் 59 ஆயிரம் வாக்குகள் பெற காரணம் நீங்கள்தான். பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் தொகுதி இது. கடந்த தேர்தலில் ஒரு தரப்பட்ட மக்கள் 75% பேர் வாக்களிக்க வரவில்லை, அவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் தமாகா பங்கு முக்கியமானதாக இருக்கும். கடந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருமண அரங்கினுள் அனுமதிக்கப்படாத பவுன்சர்கள்

Arivazhagan Chinnasamy

பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

G SaravanaKumar

விஜய் பிறந்தநாளில் “தளபதி 66” அறிவிப்பு?