முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

த.மா.காவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் தலைவரும், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தமிழக தலைவராக பதவி வகித்தவருமான ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்.

உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி ஞானதேசிகன் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேசியத்தின் மீதும், மதசார்ப்பின்மையின் மீது நம்பிக்கை கொண்ட ஞானதேசிகன் காங்கிரஸ் கட்சியின் தொண்டராக தனது இளம் வயதில் பணியாற்றினார். அவரது உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் 2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டுமுறை மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்தார். மேலும் 2009ம் ஆண்டு முதல் 2013 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பு வகித்தார்.

2014ம் ஆண்டு ஜி.கே. வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கியபோது அவரக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றார் ஞானதேசிகன். கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைதலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1949ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஞானதேசிகனுக்கு திலகவதி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஞானதேசிகன் வழக்கறிஞராகவும் பணியா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்- வைகோ

G SaravanaKumar

கொதிக்கும் எண்ணையை பசு மேல் ஊற்றிய கொடூரம் !

Vandhana

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

G SaravanaKumar

Leave a Reply