பென்னிகுவிக் பிறந்த தினம்: ஓபிஎஸ் மரியாதை

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலைக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவங்கங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் முல்லை…

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலைக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவங்கங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை, ஆங்கிலேயே பொறியாளர் பென்னி குக் கட்டினார். அவரது பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பென்னி குக்கின் 180 வது பிறந்தநாளான இன்று, தேனி மாவட்டம், லோயர்கேம்பில் அமைந்துள்ள பென்னி குக்கின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண், தேனி எம்பி ரவீந்திரநாத், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply