சட்டப் பேரவைத் தேர்தலில் நல்லவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சென்னை மண்டல தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்த ஜி.கே. வாசன், இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் நல்லவர்களுக்கு ஆதரவு அளிப்பார் என நம்புவதாகக் கூறினார்.