ஜெய்லர் 2 திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 173 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ப்லிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் படத்தின் டைட்டில் ‘தர்மன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், ராஷிக் கண்ணா, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில் இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகினார். தொடர்ந்து இப்படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்பட்டது.




