ஒரே நேர்கோட்டில் வெள்ளி, வியாழன், நிலா – நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காணக்கூடிய வெள்ளி,  வியாழன் மற்றும் துணை கோளான நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் அதற்கே…

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காணக்கூடிய வெள்ளி,  வியாழன் மற்றும் துணை கோளான நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. வானவியல் நிகழ்வுகளில் அவ்வபோது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அதிசய நிகழ்வுகள் நடைபெறும். கடந்த ஆண்டில் செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடந்தது.

அதேபோல் வானத்தில் பிரகாசமான கிரகங்களான வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் சில நாட்களாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வெள்ளி மற்றும் வியாழன் பூமியைச் சுற்றி வரும் துணைக்கோளான நிலாவும் ஒன்றுக்கொன்று ஒரே நேர்கோட்டில் சந்தித்து கொண்டன. கிரகங்கள் இணைவு என அழைக்கப்படும் வானின் அரிய நிகழ்வை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது. இதுதொடர்பாக அரிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில்  வெள்ளி, வியாழன் மற்றும் துணைக்கோளான சந்திரன் ஒரே நேர்கோட்டில் உள்ளது.

அண்மைச் செய்தி:3,500 ஆண்டுகள் அப்படியே புதைந்து கிடந்த கரடி – கண்டறிந்த ஆய்வாளர்கள்

இந்த புகைப்படம் தொடர்பாக நாசா கூறுகையில், மேற்கு வானில் இந்த அரிய நிகழ்வு நடைபெற்றது. நிலா வியாழனுக்கு நெருக்கமாகவும் அதற்கு கீழே வெள்ளி கோளும் உள்ளன” என்று கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.