#TirupatiLaddu விவகாரம் – விசாரணைக் குழு அமைப்பு!

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க…

#TirupatiLaddu Affair - Inquiry Committee Formation!

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். மேலும் கருணாகர் ரெட்டி தனது கையில் சூடம் ஏற்றி, சத்தியம் செய்தும் மறுத்தார்.

தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டூர் சரக ஐ.ஜி. சர்வ ஷரஸ்தா திரிபாதி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டி.ஐ.ஜி. அந்தஸ்து கொண்ட கோபிநாத் ஷெட்டி, கடப்பா எஸ்.பி. ஹர்ஷவர்தன் ஆகியோர் விசாரணை குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.