இணையதளத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்க்கு இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறையை திருப்பதி தேவஸ்தானம் பின்பற்றி வருகிறது.இதற்கான டிக்கெட்டுகள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டும் தேதிகளை அறிவித்துள்ளது தேவஸ்தானம். ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து…

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்க்கு இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறையை திருப்பதி தேவஸ்தானம் பின்பற்றி வருகிறது.இதற்கான டிக்கெட்டுகள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டும் தேதிகளை அறிவித்துள்ளது தேவஸ்தானம்.

ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறையை பின்பற்றி வருகிறது.இந்நிலையில் இணையதளங்களில முன்பதிவு செய்வதற்கான தேதிகள் மற்றும் நடைமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ரூ.300 தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மெய்நிகர் சேவை டிக்கெட் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை முதல் 25 தேதி வரையில் வெளியிட உள்ளது. டிக்கெட்டுகள் தேவையுள்ள பக்தர்கள் இணையதளங்களில் தேவஸ்தான கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. மேலும் ஜூலை மாதத்திற்கான டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணி முதல் 22 தேதி காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். இவை 22 ம் தேதி மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றை பக்தர்கள் மெய்நிகர் சேவைகளாக ஆன்லைனில் தரிசிக்க வசதிகள் உள்ளன.

ஜூலை மாதம் நடைபெற இருக்கும் இம்மெய் நிகர் சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 20ஆம் தேதி காலை 11.30 மணிக்கு துவங்கி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். மேலும் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்தின் ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் அறக்கட்டளையின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் 21ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டோக்கன்களை இலவசமாக முன்பதிவு செய்யலாம். 21ம் தேதி மாலை 3 மணி அளவில் மாற்றத்திறனாளிகள்,மூத்த குடிமக்கள் ஆகியோருக்கான ஜூலை மாத தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும்.  அவற்றையும் பக்தர்கள் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மே மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் 25ம் தேதி காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www. tirupathibalaji.ap.gov.in என்பதை பயன்படுத்துமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.