முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை வேகமாக சார்ஜ் செய்ய வேண்டுமா?

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் சார்ஜிங் வேகத்தை கணிசமாக அதிகரிக்க, விரும்பினால் இந்த 9 டிப்ஸை நீங்கள் பின்பற்றலாம்.

  • ஆண்ட்ராய்டு போனை வேகமாக சார்ஜ் செய்வதற்கான ஒரு சிறந்த வழி, வேகமாக சார்ஜ் ஆகும் சார்ஜரில் முதலீடு செய்வதுதான். அப்படி நீங்கள் விலை உயர்ந்த சார்ஜரை வாங்கும்போது, உங்களின் போனும் நீங்கள் தேர்வு செய்யும் சார்ஜரின் திறனும் ஒத்துபோகிறதா என்பதனை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

 

  • வைஃபை, புளூடூத் போன்ற சேவைகளை தேவையில்லாத போது ஆப் செய்து வைக்க வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட அளவு பேட்டரியை இந்த சேவைகள் தொடர்ந்து பயன்படுத்துகின்றன. அவற்றை முடக்குவது போனின் சார்ஜிங் வேகத்தை கணிசமாக மேம்படுத்தும்.

 

  • USB போர்ட்கள் மூலம் அல்லாமல் சுவர் சாக்கெட் வழியாக சார்ஜ் செய்ய முயற்சிக்க வேண்டும், கார்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற சாதனங்களில் உள்ள USB போர்ட்கள் குறைவான சார்ஜிங்கை வழங்குகின்றன. ஆனால், வால் சாக்கெட்டுகள் மிகவும் வேகத்துடன் சார்ஜிங்கை வழங்குகின்றன.

 

  • எப்போதும், ஒர்ஜினல் கேபிள் மற்றும் அடாப்டருடன் உங்கள் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய சொல்லப்படுகிறது. ஏனெனில், வேறு பிராண்டின் சார்ஜரைப் பயன்படுத்தும்போது, நீங்கள் பயன்படுத்தும் பேட்டரியை அது சேதப்படுத்தும் என சொல்லப்படுகிறது. இதனால், சார்ஜிங் வேகம் பாதிக்கலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘டிக்கெட் பரிசோதகருக்கு ரூ.10 லட்சம் அபராதம் – மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவு’

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

  • உங்கள் போனில், நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் சில செயலிகள், பின்னணி இயக்கத்தில் இருக்கும் போது, போனின் பேட்டரியை அவை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. இதனால், மெதுவாக சார்ஜ் செய்யப்படுகிறது. இந்தப் பின்னணி இயக்கத்தை நிறுத்தி வைக்கும்போது சார்ஜிங் வேகத்தை அதிகரிக்கலாம்.

 

  • உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Airplane Mode-ஐ ஆன் செய்து அதன் பின் சார்ஜ் செய்யும் போது, பேனின் சார்ஜிங் வேகம் கணிசமாக அதிகரிக்கும். ஏனெனில் Airplane Mode-ஐ பயன்படுத்தும்போது நெட்வொர்க்கிலிருந்து போன் துண்டிக்கப்படுகிறது.

 

  • தற்போது வரக்கூடிய பேட்டரிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சார்ஜிங் சுழற்சிகளை மட்டுமே கொண்டதாக வருகிறது. அதனால், சிறிய விரைவு சார்ஜர்களை பயன்படுத்தும்போது பேட்டரியின் ஒட்டுமொத்த ஆயுளைம் அது பாதிக்கிறது. அத்தோடு சார்ஜிங் வேகத்தையும் குறைத்துவிடுகிறது.

 

  • இரவு முழுவதும் சார்ஜ் செய்யும் நடைமுறையை தவிக்க வேண்டும். அது உடனடியாக உங்கள் போனை பாதிக்கவில்லை என்றாலும், உங்கள் போனின் சார்ஜிங் வேகத்தை குறைக்கும்.

 

  • சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல, தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது அல்லது கேம்களை விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும், ஏனெனில், அது பேட்டரியை சேதப்படுத்தும். அத்தோடு சார்ஜிங் வேகத்தையும் குறைக்கும். இந்த 9 டிப்ஸ்களை பயன்படுத்தும்போது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் சார்ஜ் வேகத்தை அதிகரிக்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

G SaravanaKumar

காங்கோவில் கனமழை, வெள்ளம்; நிலச்சரிவில் சிக்கி 175க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்…

Web Editor

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலுக்கும் வாய்ப்பு – மாஃபா.பாண்டியராஜன்

EZHILARASAN D