முக்கியச் செய்திகள் உலகம்

நேரம் வரும் போது அடுத்த அதிபர் குறித்து தெரிவிப்பேன்: ரஷ்ய அதிபர் புதின்

நேரம் வரும்போது தனக்குப் பின்னர் வரும் புதிய அதிபர் குறித்து தெரிவிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபராக இருக்கும் புதினின் தற்போதைய ஆட்சி காலம் வரும் 2024ம் ஆண்டு முடிவடைகிறது. எனினும் புதின் தொடர்ந்து மேலும் 12 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் வகையில் ரஷ்யாவின் அரசியலமைப்பு சட்டத்தில் கடந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி புதின் வரும் 2036ம் ஆண்டு வரை அதிபராகத் தொடர முடியும்.
மேற்கு நாடுகளுடனான உறவில் ரஷ்யா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. எண்ணைய் வளத்துக்காக பிற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக ரஷ்யாவில் பண வீக்கம் அதிகரித்திருகிறது. ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு சரிவடைந்துள்ளது. இவையெல்லாம் ரஷ்ய மக்களை கவலையடையச் செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சூழலில் ரஷ்யாவின் நாடாளுமன்ற தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இது 2024ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. ரஷ்யாவில் எதிர்கட்சி இல்லாத சூழல் நிலவுகிறது. எதிர்கட்சி வரிசையில் முன்பு இருந்த அலெக்ஸி நவல்னி என்பவரை சட்டவிரோத அமைப்பின் தலைவர் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது.

எனவே தேர்தல் நடந்தால் ஆளும் புதின் அரசே மீண்டும் வெற்றி பெறும். இந்த நிலையில்தான் ரஷ்யாவின் அரசு தொலைகாட்சியில் உரையாற்றிய புதின், எனக்கு பின்னர் வரும் அதிபர் யார் என்பது குறித்து தெரிவிப்பதற்கான நேரம் வரும் என்று நான் நம்புகின்றேன். நமது தாய் நாடான , ரஷ்யா போன்ற அழகிய நாட்டை வழிநடத்துவதற்கு என்னுடைய கருத்தின் படி தகுதிவாய்ந்த நபர் இருக்கும் சூழலில் அது குறித்து நேரம் வரும்போது நான் தெரிவிப்பேன்,” என்று கூறியுள்ளார்.

எனவே, இதன் மூலம் புதினுக்கு அடுத்ததாக ஒருவர் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிய வருவதாக அதிபரின் நிர்வாகத்தில் பணியாற்றும் அரசியல் விமர்சகர் ஒருவர் டெலிகிராம் செய்தியில் குறிபிட்டுள்ளார். பனிப்போர் காலத்தில் கேஜிபி அதிகாரியாக இருந்த புதின், 1999ம் ஆண்டு டிசம்பரில் அதிபர் பதவிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உதயநிதி அமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

EZHILARASAN D

நமக்கு கிடைத்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்- ஆளுநர்

G SaravanaKumar

எம்.ஜி.ஆர் முதல் சூர்யா வரை…

Web Editor