முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வு – அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவதற்கான அவகாசத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்து கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்ய குறித்து ஆராய ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த 23ம் தேதி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை இந்த குழுவிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகளை அனுப்பியுள்ளதாக அந்த குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு குறித்து ஆராய ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் 3வது கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த குழுவில் உறுப்பினர்களாக மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர் உள்ளனர். ஏற்கனவே, 2 முறை கூட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இன்று 3வது முறையாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, அவகாசத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:

Related posts

அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட “மீம்”!

Halley karthi

மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்

Jeba Arul Robinson

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்!

Halley karthi