பள்ளி அருகே புலி நடமாட்டம்! – ஆசிரியர்கள், மாணவா்கள் அச்சம்!!

உதகை அருகே பள்ளி அருகே புலி நடமாட்டத்தினால் ஆசிரியர்கள் மற்றும் மாணவா்கள் அச்சமடைந்த நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். உதகை அருகே உள்ள இந்து நகர் பகுதி அடர்ந்த வனப் பகுதியை…

உதகை அருகே பள்ளி அருகே புலி நடமாட்டத்தினால் ஆசிரியர்கள் மற்றும் மாணவா்கள் அச்சமடைந்த நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

உதகை அருகே உள்ள இந்து நகர் பகுதி அடர்ந்த வனப் பகுதியை ஒட்டி உள்ளது.  இங்கு சமீப நாட்களாக  கரடிகள், சிறுத்தை, புலி , போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியை ஒட்டி சிறுத்தை உலா வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள பள்ளியின் அருகே புலி நடமாடியதை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கண்டு அச்சமடைந்தனர்.

இதனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்பு சம்பவ இடத்திற்குச் சென்ற பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலி நடமாடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகள் பத்திரமாக பள்ளியில் இருந்து அனுப்பிய வைக்கப்பட்டனா்.

பின்னா் புலியின் கால் தடங்களை கண்டறியும் பணியிலும் ,தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியிலும் வனத்துறையினர் ஈடுப்படு வருகின்றனர். மேலும் புலி நடமாட்டம் பள்ளி பகுதியில் அதிகம் காணப்படுவதால் பள்ளிக் குழந்தைகள் கவனமுடன் சென்று வர வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

—–கா. ரூபி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.