உணவு வழங்கிய ஊழியரின் கையை புண்ணாக்கிய புலி

மெக்சிகோவில் மிருகக்காட்சி சாலையில் புலிக்கு உணவு வழங்கிய ஊழியரின் கையை எதிர்பாராத விதமாக புலி கடித்து குதறிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.   மெக்சிகோவில் உள்ள பெரிபன் நகரில் மிருகக்காட்சி சாலை…

மெக்சிகோவில் மிருகக்காட்சி சாலையில் புலிக்கு உணவு வழங்கிய ஊழியரின் கையை எதிர்பாராத விதமாக புலி கடித்து குதறிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

மெக்சிகோவில் உள்ள பெரிபன் நகரில் மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, முதலை உள்ளிட்ட வனவிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஊழியர்கள் சுழற்சி முறையில் தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

 

இந்நிலையில், ஜோஸ் என்ற ஊழியர் நேற்று விலங்குகளுக்கு உணவு வழங்கினார். அப்போது கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலி ஒன்றுக்கு அவர் உணவு வழங்கினார். புலியும் உணவை எதிர்ப்பார்த்து இருந்துபோது, ஜோஸ் தனது கையால் புலியை ஆசுவாசப்படுத்தி விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக புலி ஜோசின் கையை கண்ணிமைக்கும் நேரத்தில் கடித்து குதறியது.

இதனால் வலியால் துடித்து அவர் அலறினார். உடனே புலியை அவரது கையை விட்டு விட்டது. பின்னர் சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஜோசின் கையை புலி கடித்ததால் அந்த இடமே ரத்த வெள்ளமாக மாறியது.

 

மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜோஸ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பூங்காவின் உரிமையாளர் கூறும்போது, ஜோஸ் புலியுடன் விளையாடியதால் தான் அவரது கையை கடித்துள்ளதாகவும், அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே, மிருகக்காட்சி சாலையில் சிங்கம், முதலை உள்ளிட்ட விலங்குகள் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சகத்திடன் அனுமதி பெறப்பட்டுள்ளதாக என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உணவு வழங்கிய ஊழியரின் கையை உணவாக்கிய புலியின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.