ஸ்னாப்சாட் யூசரா நீங்கள்? உங்களுக்கான செய்திதான் இது

ஸ்னாப்சாட் பிரத்தியேகமான சில அம்சங்களுடன் சந்தா திட்டத்தில் செயல்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பல செயலிகள் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தா தொகையாகக் குறிப்பிட்ட பணத்தை அதன் பயனாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு…

ஸ்னாப்சாட் பிரத்தியேகமான சில அம்சங்களுடன் சந்தா திட்டத்தில் செயல்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பயன்படுத்தப்படும் பல செயலிகள் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தா தொகையாகக் குறிப்பிட்ட பணத்தை அதன் பயனாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு அதன் சேவையை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பல முன்னணி நிறுவனங்களின் சேவைகளும் சந்தா திட்டத்தில் இயக்கப்படுவது போலவே, தற்போது ஸ்னாப்சாட் பிரத்தியேகமான சில அம்சங்களுடன் சந்தா திட்டத்தில் செயல்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்களாக, உரையாடலைப் பின் செய்யும் திறன் உட்படப் பல அம்சங்களைப் பயனர்களுக்கு வழங்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Snapchat பயனர்கள் தனிப்பயன் Snapchat ஐகான்கள் மற்றும் சிறப்பு பேட்ஜைப் பெற, தவணை செலுத்த வேண்டியிருக்கும் எனவும், Snapchat+ சந்தா ஒரு மாதத்திற்கு EUR 4.59-ல் தொடங்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில், தோராயமாக 377 ரூபாயாக இருக்கலாம். பிரபல உருவாக்குநர் அலெஸாண்ட்ரோ பலுஸின் ட்வீட் படி, 1 மாத ஸ்னாப்சாட்+ சந்தாவுக்கு யூரோ 4.59 (தோராயமாக ரூபாய் 377), 6 மாத திட்டத்தின் விலை யூரோ 24.99 (தோராயமாக ரூ. 2,000), 1 வருடச் சந்தா திட்டம் EUR 45.99 (தோராயமாக ரூபாய் 3,700) என இருக்கலாம்.

அண்மைச் செய்தி: ‘Google Maps-ன் அசத்தலான புதிய சேவை; என்ன தெரியுமா?’

இந்த சந்தாவை, பயனரின் ப்ளே ஸ்டோர் கணக்கிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட இடைவெளிக்குப் பிறகு பயனர் அதை ரத்து செய்யும் வரை சந்தாக்கள் தானாகப் புதுப்பிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், தவணை சேவையின் வெளியீடு குறித்த எந்த தகவலையும் Snapchat இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.