துப்பறிவாளன் 2 படத்தின் அப்டேட்! -இயக்குநராக மாறி விஷால்?

நடிகராக இருக்கும் விஷால் தற்போது இயக்குநராக மாறி இருக்கிறார்.  விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகவிருந்தது. அதற்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோது…

நடிகராக இருக்கும் விஷால் தற்போது இயக்குநராக மாறி இருக்கிறார். 

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகவிருந்தது. அதற்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோது மிஷ்கின் மற்றும் விஷால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு நின்று போனது.

இதையடுத்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஷ்கின், நடிகர் விஷாலை கடுமையான வார்த்தைகளால் சாடியதால், இருவருக்கும் இடையேயான மோதல் அதிகமானது. இதையடுத்து, படத்தை தானே இயக்குவது என விஷால் முடிவு எடுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாக விஷால் தற்போது வீடியோ வெளியிட்டு இருக்கிறார். துப்பறிவாளன் 2 படத்தின் கதையை எழுதிய மிஷ்கினுக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

அவருடன் மோதல் ஏற்பட்ட பிறகு விஷால் எந்த இடத்திலும் மிஷ்கின் பற்றி பேசாமல் இருந்த நிலையில் தற்போது மனம் திறந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.