தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்த அக்கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வியால் அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு, எஸ்.பி. வேலுமணி & சி.வி. சண்முகம் தரப்பு என இரு அணிகளாக கட்சி பிரிந்தன.
இரு தரப்புகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எதிர் தரப்பு மாவட்ட செயலாளர்களை இபிஎஸ் பதவி நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் இன்று எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாக்கரை சந்தித்த அவர்கள் தஙகள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.







