ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய த்ரெட்ஸ்: 4 மணி நேரத்திலேயே 50 லட்சம் ஃபாலோவர்ஸ்!

ட்விட்டருக்கு போட்டியாக களத்தில் இறங்கியது மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ். த்ரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 4 மணி நேரத்திலேயே 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளனர். எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட…

ட்விட்டருக்கு போட்டியாக களத்தில் இறங்கியது மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ். த்ரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 4 மணி நேரத்திலேயே 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளனர்.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான ஆப் ஆன த்ரெட்ஸை இன்று மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ப்ளூடிக் வெரிஃபைடு கணக்குகள் ஒரு நாளைக்கு 6,000 ட்வீட்களை படிக்கலாம். ப்ளூ டிக் இல்லாதவர்கள் 600 ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும். அதிலும் புதிய கணக்குகள் 300 மட்டுமே பார்க்க முடியும் என்ற லிமிட்டை அண்மையில் செட் செய்தார் மஸ்க். பின்னர், இந்த லிமிட்டை வெரிஃபைடு யூசர்களுக்கு 10,000, மற்றவர்களுக்கு 1,000 மற்றும் புதிய யூசர்களுக்கு 500 ஆக அதிகரித்தார். முன்பு இலவசமாக கிடைத்த ட்வீட் டெக்கும் தற்போது கட்டணம் செலுத்திய ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, வருமானத்தைப் பெருக்க எலான் மஸ்க் செய்து வரும் காரியங்கள் தான் பலரை கடுப்பேற்றி வருகிறது. ட்விட்டர் யூசர்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், ‘த்ரெட்ஸ்’ என்ற ஆப்பை ட்விட்டருக்கு போட்டியாக உருவாக்கி களத்தில் மெட்டா நிறுவனம் இறக்கியுள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகிய முன்னணி சமூக வலைதளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம், எலான் மஸ்கிற்கு எதிராக த்ரெட்ஸை கோதாவில் இறக்கியுள்ளது.

இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் ஆப்ஸ் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உள்ளடக்கிய 500 எழுத்துகள் கொண்ட ‘த்ரெட்களை’ நாம் பதிவிடலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.