அதிமுக-வை ஒன்று சேர விடாமல் தனித்து நிற்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக மத்திய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்
ஓபிஎஸ் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 1ஆம் தேதி பூலித்தேவன் ஜெயந்தி விழாவிற்கு வருகை தரும் ஓபிஎஸ்-க்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளார்கள் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒன்றரை கோடி தொண்டர்களும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ன் பக்கமே இருக்கிறார்கள். அதிமுக ஒன்றிணைந்து ஓபிஎஸ் பின்னால் செயல்பட வேண்டும் என்பது
தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. தொண்டர்களின் விருப்பம் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் என கூறினார். ஆனால் அதிலிருந்து தனித்து நிற்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்.
ஆர்.பி.உதயகுமார் அவ்வப்போது அவரது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பார். ஜெயலலிதா கூறியதுபோன்று அதிமுக 100 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் -ன் எண்ணம். அதிமுக கொடியும் இரட்டை இலை சின்னமும் ஓபிஎஸ்-ன் பக்கம் தான் உள்ளது. அனைத்து பதவிகளையும் பார்த்த ஓபிஎஸ் -ற்கு பதவி ஆசை எப்படி இருக்க முடியும் என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மனோஜ் பாண்டியன் பதிலளித்தார்.
– இரா.நம்பிராஜன்