மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் எதிர்க்கருத்து இருக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறார்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகளாவதையொட்டி சென்னை தாகூர் திரைப்பட மையத்தில் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. தொடர்ந்து பராசக்தி திரைப்படம் குறித்து கருத்தரங்கமும் நடைபெற்றது. அதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதில் உரையாற்றிய எம்.பி கனிமொழி, தமிழ்த் திரைப்படங்களில் Turning point பராசக்தி
மதம், சமூக மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்கப்படும் படம். சிவாஜிக்குப் பிறகுதான் நடிப்பும் முக்கியமானது என பலரும் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது என பேசினார்.
அத்துடன், பெண் சிந்திக்கக் கூடாது, கேள்விகள் கேட்கக்கூடாது என்பதையெல்லாம் உடைக்கக் கூடிய படம் ஆண் சமூகம் அன்பு செலுத்துவதாக எண்ணிக்கொண்டு அடக்குமுறையை செலுத்துகிறது என்றார்.
சமூகச்சாடல்கள், மதச் சாடல்கள், பணப்பாகுபாட்டை உடைக்க வேண்டும் என படத்தில் சொல்வதை திராவிட இயக்கம் செய்துள்ளது.பிச்சைக்காரர்கள் மறுவாழ்வை திராவிட இயக்கம் முன்னெடுத்துச் செய்துள்ளது என அவர் கூறினார்.
படத்தில் வைக்கக் கூடிய கேள்விகளை இன்னமும் கேட்பது வருத்தமான விசயம்
சில கருத்துகளை நாம் சொன்னோம் என்றால் சுனாமியாக எழும் அளவுக்கு சமூகம் உள்ளது. மறுபடியும் களமாட வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருத்தமான, விவாதிக்கப்பட வேண்டிய கருத்துகளை பேசியுள்ளது பராசக்தி.
திரைப்படம் புதிய படமாக வெளியிட்டால் எதிர்வினைகள் இருக்கும் என்றார்.
அத்துடன், மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் எதிர்க்கருத்து இருக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறார்கள்.தனிப்பட்ட சாடல்களை முனைவைத்தால் பெண்கள் பயந்து போவார்கள் என நினைக்கிறார்கள். அதையெல்லாம் கடந்தால்தான் மாற்றங்கள் முன்வரும் எனவும் அவர் பேசினார்.








