சுய மரியாதை, சம தர்ம அரசியலை என்றும் உயர்த்தி பிடிப்போம் என நூல்கள்
வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில்
நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்
கலந்து கொண்டு ஏ எஸ் பன்னீர்செல்வம் எழுதிய கலைஞர் மு கருணாநிதி வரலாறு
மற்றும் ஜெ ஜெயரஞ்சன் எழுதிய திராவிடமும் சமூக மாற்றமும் என்ற இரண்டு நூல்களை
வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறித்துறை அமைச்சர்
காந்தி, தொழிநுட்பத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக துணை பொது
செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தேவையான மாபெரும் அறிவு புத்தகங்களை வெளியிட்டு உள்ளேன். இந்தியாவின் தலை சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான பன்னீர் செல்வம் எழுதிய நூல், தலை சிறந்த பொருளாதார நிபுணர் எழுதிய நூல் இன்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் அறிவு கருவூலங்கள் என்றார்.
மேலும், கருனாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர் பன்னீர் செல்வம், ஜெயரஞ்சன்
பற்றி சொல்ல வேண்டியதில்லை என கூறிய அவர், செய்தி தொலைக்காட்சி வாயிலாக திராவிடத்தை குறை கூறியவர்கள் சொற்களை வாங்கி அவர்கள் மீதே எரியும் வித்தைக்காரர்கள் என்றார்.
”கருணாநிதி குறித்து எவ்வளவோ நூல்கள் உள்ளன அதில் இந்த நூல் முக்கிய இடம்
பிடித்துள்ளது . குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையில் அவர் செயல்பட்டது
குறித்தும், அண்ணா நினைவிடத்தில் தான் தனக்கும் இடம் வேண்டும் என்று சொன்னதும்
இந்த நூலில் வருகிறது. அந்த இடத்தை பெற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்ணுக்கு முன் வருகின்றன. கருணாநிதி பற்றிய நூல்களில் இருந்து வேறுபட்டதாக பன்னீர் செல்வம் எழுதிய நூல் உள்ளது.” என முதலமைச்சர் கூறினார்.
கல்வி, தொழில் , உட்கட்டமைப்பு மட்டுமல்ல சமூக நிதியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுய மரியாதை, சம தர்ம அரசியலை என்றும் உயர்த்தி பிடிப்போம் என்று தெரிவித்தார்.