முக்கியச் செய்திகள் தமிழகம்

“சிறுபான்மை மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்”: பீட்டர் அல்போன்ஸ்

சிறுபான்மை மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பொறுப்பேற்ற பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மாநில சிறுபான்மையினர் ஆணைய அலுவலகத்தில், அந்த ஆணயத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட, பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், ஆணையத்தின் உறுப்பினர்களாக ஏ.பி.தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், பைரேலால் ஜெயின், டான் பாஸ்கோ, அருட்சகோதரர் இருதயம், பிக்கு மவுரியார் புத்தா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறுபான்மைத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, வின்சன்ட் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை மக்களின் உரிமைகள், வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிட்டார். தாங்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் நல்லெண்ன தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, சிறுபான்மை மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடப் போவதாகக் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

திறக்கப்பட்டது தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Vandhana

குறைந்த அளவிலேயே கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது : கே.எஸ்.அழகி

Jeba Arul Robinson

கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த விவகாரம்; 3 பேர் கைது

Saravana Kumar