இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதி சட்டமன்ற அலுவலத்தில் ஊழியர்கள், தொகுதி மக்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் பொங்கல்…

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் எந்த காலத்திலும் அண்ணன் தம்பியாக முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரம் தொகுதி சட்டமன்ற அலுவலத்தில் ஊழியர்கள், தொகுதி மக்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் பொங்கல் விழா கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலாவை உயர்த்திப் பேசினாலும், வால் பிடித்து பேசினாலும், ஒருபோதும் அதிமுக ஏற்றுக்கொள்ளாது என்றார்.

அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் இருக்கும் பிரச்சனை அண்ணன் தம்பி பிரச்சனை, அவற்றை உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரன் கட்சியுடன் ஒரு நாளும் அதிமுக சேராது என்றும், அவர்களுடன் சகோதர உறவுமுறை கொண்டாட முடியாது என்றும் திட்டவட்டமாக ஜெயக்குமார் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply