வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து புபேந்தர் சிங் மான் விலகல்!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து விலகுவதாக புபேந்தர் சிங் மான் அறிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி,…

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து விலகுவதாக புபேந்தர் சிங் மான் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 52வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைத்தும், விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த குழுவில் புபேந்தர் சிங் மான், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழுவிற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புபேந்தர் சிங் மான் விலகுவதாக அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply