புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் , அதனை மீறி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 230 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.
கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும்
ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம்
நடைமுறைப்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15ஆம்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டது.
தருவைகுளம் ஆகிய இடங்களில் மொத்தம் 545 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல்
கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள்
தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மீன்பிடி தடை காலம் நேற்று முன் தினம் நள்ளிரவு முடிவடைந்த
நிலையில், கடலுக்கு செல்ல தயாராக இருந்தனர். ஆனால் மன்னர் வளைகுடா பகுதியில் ஜூன் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து மீன் பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் டீசல் நிரப்புதல், படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றுதல்,
வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்ட போது இதனை தடுக்கவோ, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடவோ அதிகாரிகள் முன்வரவில்லை. .
விசைப்படகு மீனவர்கள் ஆயத்தமாகினர் இதனையடுத்து மீன்வளத் துறை இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் விசைப்படகு மீனவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
விசைப்படகு மீனவர்கள் வருகிற 18-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கப்பட்ட நிலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. எனினும் 230க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தடையை மீறி மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.








