இயக்குனர் அட்லி – பிரியா தம்பதியினர் தங்களது ஆண் குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ளனர்.
தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நிறைமாத கர்ப்பினியான பிரியாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட படங்கள் வைரலான நிலையில் இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை குறித்துஅட்லீ மற்றும் பிரியா ஆகியோர் தமது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தனர். ஆனால் குழந்தையின் பெயரை இதுவரை வெளியிடாமல் இருந்தனர்.
https://twitter.com/iamsrk/status/1654836975663480833
நேற்று பாலிவு சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் “ இயக்குனர் அட்லீ ஸ்மார்ட் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நபர். அவரது மனைவி பிரியா சிறந்த உணவை எனக்கு அளித்தார். மேலும் அவர்களது புது வரவான அன்பான குழந்தை “மீர்” வருகை தந்துள்ளது” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் “ எங்களது குழந்தையின் பெயரை தற்போது வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரின் பெயர் மீர்” என தெரிவித்துள்ளார். அட்லியூம் “ உங்களது அன்பும் , பிரார்த்தனைகளும் எங்கள் குழந்தைக்கு வேண்டும்” என இதனை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
ஷாருக் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் அப்டேட்டை இயக்குனர் அட்லீ நேற்று அறிவித்தார். அதன்படி ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







