விபத்தில் சிக்கிய “பொன்னியின் செலவன்-2” பாடகி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

“வெந்து தணிந்தது காடு” படத்தில்  காலத்துக்கும் நீ வேணும் மற்றும் பொன்னியின் செல்வன் 2 அகநக பாடலை கன்னடத்தில்  பாடிய பாடகி ரக்‌ஷிதா சுரேஷ் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாடகி ரக்‌ஷிதா…

“வெந்து தணிந்தது காடு” படத்தில்  காலத்துக்கும் நீ வேணும் மற்றும் பொன்னியின் செல்வன் 2 அகநக பாடலை கன்னடத்தில்  பாடிய பாடகி ரக்‌ஷிதா சுரேஷ் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பாடகி ரக்‌ஷிதா சுரேஷ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மழலை பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இளைஞர்களுக்கான பாடகர்/பாடகிகளை தேர்வு செய்யும் சூப்பர் சிங்கர் , சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தனக்கென தனித்த இடத்தை உருவாக்கினார்.

தொலைக்காட்சிகளில் தனது குரலின் மூலம் தனித்த அடையாளத்தை உருவாக்கிய ரக்‌ஷிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடா என பல மொழிகளிலும் பாடல்களில் பாடியுள்ளார். அதேபோல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெற்று தன்னுடைய குரலின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த நிலையில் இன்று அவர் விபத்தில் சிக்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்..

”இன்று ஒரு பெரிய விபத்தை சந்தித்தேன். இன்று காலை நான் மலேசியாவில் உள்ள விமான நிலையத்திற்கு திரும்பிச் செல்லும் போது நான் சென்ற கார் டிவைடரில் மோதி சாலையோரத்தில் நொறுங்கியது.

அந்த 10 வினாடிகள் என் மொத்த வாழ்க்கையும் கண்முன்னே வந்து போனது.  காரில் இருந்த ஏர் பேக்கிற்கு ( AIR BAG ) நன்றி, அது மட்டும் இல்லையெனில் நிலைமை மோசமாக இருந்திருக்கும்.

நடந்தவற்றை நினைத்தால் இன்னும் நடுக்கம் ஏற்படுகிறது. நான், ஓட்டுனர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்ற சக பயணிகளும் சிறிய காயங்களுடன் பாதுகாப்பாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/RakshitaaSuresh/status/1655084093695045632

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.