நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,591 பேர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,591 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,848 பேர் குணமடைந்துள்ளனர். 338 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செப்.10ம் தேதி 260ஆக இருந்த உயிரிழப்பு நேற்று 308ஆக உயிரிழப்பு பதிவாகியது. இந்நிலையில் இன்று 338ஆக உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

மொத்த பாதிப்பானது 3,32,36,921ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3,84,921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,24,09,345 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 4,42,655 ஆக அதிகரித்துள்ளது.

https://twitter.com/MoHFW_INDIA/status/1436906829229932546

மேலும், இதுவரை 73,82,07,378 பேருக்கும், கடந்த 24 மணி நேரத்தில் 72,86,883 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 54,18,05,829 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்றும், நேற்று மட்டும் 15,30,125 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.