“இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை”… உண்டியலில் மாட்டிக் கொண்ட கை… கையும் களவுமாக சிக்கிய நபர்!

தருமபுரி அருகே கோயில் உண்டியலில் திருய முயன்றபோது, கை உண்டியலில் மாட்டிக் கொண்டு, விடிய விடிய கோயிலில் இருந்து சிக்கிய திருடன்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி கிராமத்தில் பெரியாண்டிச்சி
அம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு, அதேப் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் பெரியாண்டிச்சி கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்று முயன்றுள்ளார். ஆனால் அது இரும்பு உண்டியல் என்பதால் உடைக்க முடியவில்லை. இதனையடுத்து உண்டியல் வாய் வழியாக கையை
உள்ளே விட்டு பணம் எடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது கை உண்டியலில் மாட்டியதால், வெளியில் எடுக்க முடியவில்லை‌. கை வெளியே எடுக்க முடியாமல், விடிய விடிய கோயிலிலேயே கிடந்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள், காவல் துறை, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உண்டியலை இயந்திரம் மூலம் வெட்டி, திருடனின் கையை உண்டியலில் இருந்து வெளியே எடுத்தனர்.

மேலும் உண்டியலில் ரூ.500 மட்டுமே இருந்தது‌. அதியமான்கோட்டை காவல் துறையினர் தங்கராஜை கைது செய்தனர். தங்கராஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.