உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வாதிடவில்லை : திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை பகிர்வதில், தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும், என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, போதிய கட்டமைப்பு வசதி…

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை பகிர்வதில், தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும், என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் ஏற்பட்டுள்ள உயிர் சேதத்துக்கு, மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார். கொரோனா தடுப்பூசியை இந்தியா முழுவதும் கட்டணமின்றி, மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தமிழக மக்களின் நலனுக்கு எதிராக உள்ளதாக கூறிய அவர், தமிழகத்தின் நிலையையும், ஆக்சிஜன் பற்றாக்குறையையும் உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு முறையாக வாதிடவில்லை என குற்றஞ்சாட்டினார். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனுக்கு, தமிழகத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்து வாதிட வேண்டுமென்றும், திருமாவளவன் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.