3ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி…

மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 9 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தார். 200 ஆண்டுகள் பழமையான ஆப்பிரிக்க மரத்தின் வரலாற்று குறிப்பேட்டை முதலமைச்சர் நாளை வெளியிடவுள்ளார் என்று கூறினார்.

3ம் கட்டமாக நடைபெறும் 20 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்களில் 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், இன்று 14 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாகவும் கூறிய அமைச்சர்,  திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.