திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்படும்: அமைச்சர் செல்லூர் ராஜு

திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு உறுதிபடத் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரியில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது, இம்முகாமில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கூட்டுறவுத்துறை…

திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரியில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது, இம்முகாமில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பணி நியமன ஆணைகளை வழங்கினார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி காலத்தில் தான் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் இவை அனைத்தையும் மறந்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதால் எந்தவொரு தாக்கமும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மக்கள் நல திட்டங்களை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக கூட்டணிக்குள் பிரச்னை வெடித்துள்ளதாக் கூறிய அவர், அந்த கூட்டணிக்குள் நிச்சயமாக பிளவு ஏற்ப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.ராஜிவ் கொலையில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply