காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்துநின்று போட்டியிட் முடியுமா? : எல்.முருகன்

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்துநின்று போட்டியிட்டு வெல்ல முடியுமா? என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில்…

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்துநின்று போட்டியிட்டு வெல்ல முடியுமா? என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், நேதாஜியின் உருவப்படத்துக்கு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக சார்பில், வாக்குச்சாவடி குழுக்களை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி நாட்டில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த எல். முருகன், காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஓரிடத்திலாவது தனித்துநின்று போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply