முக்கியச் செய்திகள் தமிழகம்

தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும்; தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது- ஆளுநர் தமிழிசை

தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும், தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பொங்கல் விழா கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறினார். இந்த பொங்கல் ஒற்றுமையாக தமிழரின், இந்திய பெருமை உயர்த்துவதாக இருக்க வேண்டும். கொரோனாவுக்கு பிறகு நாம் அனைவரும் இணைந்து கொண்டாடும் பொங்கல் இது. இதற்கு இறைவனின் ஆசியும், தடுப்பூசியும் காரணம் என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எவ்வளவு பெரிய அபாயகரமான கட்டத்தில் இருந்து வெளி வந்திருக்கும் நேரத்தில் வாழ்க்கையும், அரசியலும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சின்ன கருத்து மாற்றம் காரணமாக இணையதளத்தில் கடுமையாக விமர்சிப்பது, திட்டி கூட சொல்லலாம். ஆனால் மரபு மீறி விமர்சிப்பது சரி அல்ல. எந்த நிகழ்வு என்றாலும் மற்றவர்களை புண்படுத்தாமல் நாகரீகமாக கடந்து செல்வதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

சட்டமன்றத்தில் நடந்ததை கூட எது சரி எது தவறு என்று சொல்வதை விட கடந்து செல்ல வேண்டும். மிகக் கடுமையான வார்த்தையில் ஆளுநரை விமர்சிப்பதும் சரியல்ல. தமிழ்நாடு என்ற வார்த்தையை பொருத்தவரையில் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு நீண்ட வரலாறு உள்ளது.

காமராஜர் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டு அண்ணாதுரை தலைமையில் சட்டம் ஆக்கப்பட்டது. கருத்துக்கள் மாறுபடலாம், கருத்தாக்கங்கள் மோதலாக வெடிக்காமல், மோசமான விமர்சனங்களாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களாக இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து என்று கூறினார்.

சில நேரங்களில் சில நிகழ்வுகளும், விமர்சனங்களும் மனதிற்கு வருத்தமாக உள்ளது. இணையதளத்தில் வார்த்தை பிரயோகம் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. தமிழின் சுவையை ட்விட்டரிலும், வாட்ஸ் அப்பிலும் கொண்டு வர வேண்டும். ஒரு கருத்தை சொன்னால் அதை நாகரீகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது தமிழ் எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, அதேபோல் இணையதளங்களிலும் இனிமையாக இடம் பெற வேண்டும். கருத்து மோதல்களாக இல்லாமல் கருத்து பரிமாற்றங்களாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது, அதிகமாகி கொண்டு இருக்கிறது. நானும் நாகரிகமாக பதிவு செய்கிறேன். நீங்களும் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும்.

இன்றைய பொங்கல் தமிழக தமிழ்நாட்டு பொங்கல். தமிழ்நாட்டின் தமிழக தமிழ் பொங்கல். ஏனென்றால் சில இடங்களில் தமிழ்நாடு என்று உபயோகிக்கப்படுகிறது தமிழகம் என்று உபயோகிக்கப்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றை விடுத்து சொல்ல முடியாது.

 

ஒரு வார்த்தையை விட்டு இன்னொரு வார்த்தைக்கு முக்கியத்துவம் என்னால் சொல்ல முடியாது. தமிழ்நாடும் வேண்டும், தமிழகமும் வேண்டும். என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்பதற்கும், நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்பதற்கும் என்ன வேறுபாடு உள்ளது. நான் வேறு என் வேறா?

தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும். தனிநாடு என்ற உணர்வு இருக்கக்கூடாது என்று சொன்னேன் என்று கூறினார். தமிழக ஆளுநர் இன்றி சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, அது தவறு. கருத்து மாறுபாடுகள் மோதல்கள் இருக்கலாம். அதற்காக ஆளுநரே இல்லாமல் சட்டசபை எப்படி. அரசியல் அமைப்பு சட்டத்தில் அவருக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. இப்படி அதிகபட்சமாக நடந்து கொள்வது தான் தவறு. உலகத்திற்கு இந்தியா வழிகாட்டப் போகிறது என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அருண் விஜய்யை பார்த்தால் போலீசுக்கு பொறாமை-பார்த்திபன்

EZHILARASAN D

முல்லை பெரியாறு உரிமையை விட்டுத்தர மாட்டோம் – முன்னாள் அமைச்சர்

Halley Karthik

தீபாவளிக் கொண்டாட்டம் அமெரிக்க பண்பாட்டின் மகிழ்ச்சியான பகுதி: அமெரிக்க அதிபர்

EZHILARASAN D