பாரதம் என்பதில் எந்த தவறும் இல்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பி.கே.மூக்கையா தேவரின் 44-வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அனைத்து சமுதாயத்திற்கும் தலைவராக அழைக்கப்படும் பி.கே.மூக்கையா தேவரின் 44-வது குரு பூஜையை முன்னிட்டு. இங்கு வந்துள்ளோம். பி.கே.மூக்கையா தேவருக்கு சிலை, பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம் அமைக்க எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
பாரதம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், அனைவரும் பழமையை விரும்புகிறார்கள். அதே போல தான் பாரதமும். அதில் எந்த தவறும் இல்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.







