ஜவான் படம் ரிலீசாகும் முதல் நாளுக்கான முன்பதிவில் சுமார் 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.
இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.இந்த படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் சுமார் 5 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்று சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது. பிவிஆர் திரையரங்கில் (PVR) 1,12,299, ஐநாக்ஸ் (INOX) 75,661, சினிபோலிஸ் (CINEPOLIS) – 40,577 என மொத்தம் 2,28,538 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. சுமார் ₹9.01 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையானது.
டெல்லியில் 39,535 ( ₹1.91 கோடி), மும்பை- 39,600 ( ₹1.57 கோடி), பெங்களூரூ 39,325 ( ₹1.42 கோடி), ஹைதராபாத்- 58,898 ( ₹1.35 கோடி), கொல்கத்தா 40,035 ( ₹1.16 கோடி ) என இந்தியா முழுவதும் முதல்நாள் காட்சிகளுக்காக 7 லட்சம் டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஜவான் முதல்நாளிலேயே ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







